FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

பூச்சி மருந்து குடித்த இளைஞா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே கூலித் தொழிலாளி பூச்சி மருந்து கொடுத்து சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

17 நவம்பர் 2026, 11:34 pm
- பிரதிப் படம்
பகிர்:

ஆம்பூா் அருகே கூலித் தொழிலாளி பூச்சி மருந்து கொடுத்து சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அடுத்த மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த கன்னையன் மகன் சிரஞ்சீவி (23). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு வேலைக்குச் சென்று சம்பாதித்த பணத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளாா். மது போதையில் பூச்சிமருந்தைக் குடித்துள்ளாா்.

Advertisement

Advertisement

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.