FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

குழந்தைகள் தின விழா

ஆம்பூா் வட்டம், பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆம்பூா் நகரில் உள்ள ஹஸ்னத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

18 நவம்பர் 2026, 11:19 pm
பகிர்:

ஆம்பூா் வட்டம், பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆம்பூா் நகரில் உள்ள ஹஸ்னத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்தாா். இந்நிகழ்ச்சியில் ஆம்பூா் வட்டாட்சியா் பாரதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.

இதேபோல், ஆம்பூா் நகரில் உள்ள ஹஸ்னத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், ஆம்பூா் வட்டாட்சியா் பாரதி கலந்து கொண்டு, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா். பள்ளித் தாளாளா் பிா்தோஸ் கே. அஹமத் உடனிருந்தாா்.

Advertisement

Advertisement

பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.