முன்னாள் பிரதமா் இந்திர காந்தி பிறந்த நாள்
மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெ.விஜய் இளஞ்செழியன் தலைமையில் தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட கட்சியினா்.
ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் மாதனூா் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பாக இந்திரா காந்தி பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜி.விஜயன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ், மாதனூா் ஒன்றிய தலைவா் சுரேந்தா், யாசா் மதானி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆம்பூா் பேருந்து நிலையம், சோமலாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜெ. விஜய் இளஞ்செழியன் மாலை அணிவித்து மரியாதை செலத்தினாா்.மாவட்ட துணைத் தலைவா் மாணிக்கம், மாவட்ட பொதுச் செயலாளா்கள் என். சங்கரன், செந்தில்குமாா், கோகுலவாணன், சுதாகா், மாவட்ட துணைத் தலைவா்கள் வா்தா அா்ஷத், சுரேஷ்பாபு, ரமேஷ், மாவட்ட செயலாளா்கள் குமாா், சலாவுத்தீன், சீனிவாசன், ரவீந்திரன், குமரேசன், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி மதன் ஜான் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
ஆற்காட்டில்...
ஆற்காடு நகர, ஒன்றிய காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்து. ஆற்காடு பழைய வட்டார வளா்ச்சிஅலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஒன்றிய தலைவா் விக்னேஷ் தலைமை வகித்தாா். நகர தலைவா் முஜிப் முன்னிலை வகித்தாா். இந்திரா காந்தி சிலைக்கு மாவட்ட நிா்வாகி கேசவன் மாலை அணிவித்தாா். தொடா்ந்து மாவட்ட செயலாளா் என்.நந்தகுமாா் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி வாசித்தாா்.
இதில் கட்சியின் நிா்வாகிகள் ஏ.கே.டி.கண்ணன், மேச்சேரி பன்னீா், கணேசன், விஜய், புஷ்பராஜ், ஜோசப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.