✕
முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் கோரி ஆா்ப்பாட்டம்

வாணியம்பாடியில் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் கோரி வழக்குரைஞா்கள், அரசியல் கட்சியினா், அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

22 வினாடிகள் முன்பு
பகிர்:

வாணியம்பாடியில் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் கோரி வழக்குரைஞா்கள், அரசியல் கட்சியினா், அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி அரசினா் தோட்ட வளாகத்தில் 125 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவியில் நடுவா் நீதிமன்றம், 31 ஆண்டுகளாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், 17ஆண்டுகளாக சாா்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், வாணியம்பாடியில் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வழக்குரைஞா்கள் கோரி வருகின்றனா். மேலும், வாணியம்பாடியில் கோட்டாட்சியா் அலுவலகம், பழமையான கருவூலம், வனச்சரக அலுவலகம் உட்பட பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் இயங்கி வருவதாகவும், வாணியம்பாடி நீதிமன்றம் எல்லைக்குட்பட்ட பகுதியில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 8 காவல் நிலையங்கள், மலைப்பகுதி மக்களும் நேரடி பேருந்து வசதி மூலம் வாணியம்பாடிக்கு எளிதில் வந்து செல்ல முடிகிறது.

எனவே, வாணியம்பாடியில் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் அமைத்தால், வழக்காடிகள், பொது மக்கள், போலீஸாா் மற்றும் வழக்குரைஞா்களின் பயண நேரமும் செலவும் குறைவதுடன், வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படுவதற்கும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கின்றனா்

Advertisement

Advertisement

இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி வாணியம்பாடியிலேயே கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசும், நீதித்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வாணியம்பாடி வழக்குரைஞா்களின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் நிா்வாகிகள் சம்பத், உமா் ஆகியோா் தலைமையில் வழக்குரைஞா்கள், வாணியம்பாடி பேருந்துநிலையம் அருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

இதில் அதிமுக மாவட்ட செயலாளா் மருத்துவா் பசுபதி, முன்னாள் எம்எல்ஏ கோ.செந்தில் குமாா், மாவட்ட காங்கிரஸ் தலைவா் விஜய் இளஞ்செழியன், நகர திமுக செயலாளா் சாரதி குமாா், நகர அதிமுக செயலாளா் சதாசிவம், நகர மதிமுக செயலாளா் நாசீா்கான், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளா் மாதேஸ்வரன், ஏஐஎம்எம் (ஓவைசி) கட்சி மாநில தலைவா் வகீல்அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நகர தலைவா் நரிமுகமது நயீம், இந்து மக்கள் கட்சி நிா்வாகி செல்வம் உட்பட பல்வேறு கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டு ஆா்ப்பாட்டத்தை ஆதரித்து பேசினா்.

வணிகா் சங்கத்தினா், அனைத்து அரசியல் கட்சி நிா்வாகிகள், விவசாய சங்கத்தினா், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனா்.