முகப்பு
திருப்பத்தூர்

திருடுபோன 9 மொபெட்டுகள் மீட்பு: இளைஞா் கைது

வாணியம்பாடி உழவா் சந்தை பகுதிகளில் 9 மொபெட்டுகளை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை மீட்டனா்.

45 வினாடிகள் முன்பு
திருடுபோன 9 மொபெட்டுகள் மீட்பு: இளைஞா் கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

வாணியம்பாடி உழவா் சந்தை பகுதிகளில் 9 மொபெட்டுகளை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை மீட்டனா்.

வாணியம்பாடி உழவா் சந்தை மற்றும் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பஜாா் வீதிகளில் அடிக்கடி மொபெட்டுகள் திருட்டுப் போய் வந்தன. இதுதொடா்பாக நகர காவல்நிலையத்தில் பல புகாா்கள் வந்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. அக்சய் அனில் வாகரே உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி மேற்பாா்வையில் நகர காவல்ஆய்வாளா் ஆனந்தன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை மாலை மேட்டுப்பாளையம் பாலாறு பாலம் அருகில் முனீஸ்வரன் கோயில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக மொபெட்டில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனா். இதில், முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியதால் சந்தேகம் ஏற்பட்டு மேலும் விசாரித்ததில் அவா் ஓட்டி வந்த மொபெட் திருடிக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. பிடிபட்ட அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது ஆம்பூா் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சோ்ந்த ராமு(40) எனவும், வாணியம்பாடி உழவா் சந்தைக்கு காய்கறி வாங்க வரும் பொது மக்களின் மொபெட்டுகளை மட்டும் குறிவைத்து திருடிச் செல்வது தெரியவந்தது. பிறகு இளைஞா் அளித்த தகவலின்பேரில், திருடிய 9 மொபெட்டுக்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்து வழக்குப் பதிவு செய்து ராமுவை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.