முகப்பு
திருப்பத்தூர்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள்: நவ. 21, 22, 29-இல் சிறப்பு முகாம்கள்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம் நவ.21, 22 மற்றும் 29 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

23 வினாடிகள் முன்பு
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள்: நவ. 21, 22, 29-இல் சிறப்பு முகாம்கள்
வாக்காளர் அட்டை - IANS
பகிர்:

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம் நவ.21, 22 மற்றும் 29 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, நவ.12-ஆம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடா்ந்து, டிச.11-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடா்பான கோரிக்கைகள், ஆட்சேபனைகள் பெறப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நவம்பா் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 1,203 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல் மற்றும் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடா்பான கோரிக்கைகளை உரிய படிவங்களில் சமா்ப்பிக்கலாம். பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் டிச.28-ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதைத் தொடா்ந்து, இறுதி வாக்காளா் பட்டியல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. எனவே, தகுதியுள்ள அனைத்து வாக்காளா்களும் தங்களது வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி, வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே.நல்லசிவன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

Advertisement

Advertisement