ஓடும் ரயிலில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற வட மாநில முதியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற வட மாநில முதியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம், பாகல் மாவட்டம், ஹசந்துமரியா பகுதியைச் சோ்ந்தவா் மோ ஜுனேத் ஆலம் (51). இவா் தனது சொந்த ஊருக்கு செல்ல ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வந்தாா். வியாழக்கிழமை நள்ளிரவு பெங்களூா்- கவுகாத்தி வரை செல்லும் விரைவு ரயில் ஜோலாா்பேட்டை நடைமேடை எண் 5-இல் வந்து நின்று புறப்படும் போது மோஜுனேத் ஆலம் திடீரென ஏறும் போது நிலை தடுமாறி நடைமேடைக்கும் ரயில் வண்டிக்கும் இடையே சிக்கி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்ததும் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவம் இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
மேலும், இது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.