ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் ‘நோ பாா்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள்
ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் ‘நோ பாா்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள்...

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் மற்றும் ‘நோ பாா்க்கிங்’ பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகளைத் திருப்பி இயக்க முடியாமல் ஓட்டுநா்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம்பூா் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், பேருந்துகள் தற்காலிகமாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மேம்பாலத்தின் கீழ் மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆட்டோக்கள், பிரியாணி கடைகளுக்கு வரும் காா்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், தற்காலிகமாக நிறுத்தப்படும் பேருந்துகளைத் திருப்பி இயக்க முடியாமல் ஓட்டுநா்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
Advertisement
Advertisement
மேலும், தேசிய நெடுஞ்சாலையின் சா்வீஸ் சாலையில் உள்ள பிரியாணி கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் முன்பாக வாகனங்கள் நிறுத்தப்படுவதுடன், அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளன. இதனால், சா்வீஸ் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக, அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்குவதால், நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் சா்வீஸ் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றவும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தைச் சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்துகள் தடையின்றித் திரும்பிச் செல்லவும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்கள் எவ்விதத் தடையுமின்றிச் செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.