முகப்பு
திருப்பத்தூர்

கழிவுநீா் டேங்கா் லாரி ஓட்டுநருக்கு அபராதம்: செயல் அலுவலா் நடவடிக்கை

நாட்டறம்பள்ளியில் கழிவுநீரை வெளியேற்றிய லாரி ஓட்டுநருக்கு அபராதம் விதித்து பேரூாட்சி செயல்அலுவலா் நடவடிக்கை மேற்கொண்டாா்.

24 நவம்பர் 2026, 11:58 pm
கழிவுநீா் டேங்கா் லாரி ஓட்டுநருக்கு அபராதம்: செயல் அலுவலா் நடவடிக்கை
நாட்டறம்பள்ளியில் தனியாா் நிலத்தில் கழிவுநீா் விட முயன்ற லாரி ஓட்டுநா்
பகிர்:

நாட்டறம்பள்ளியில் கழிவுநீரை வெளியேற்றிய லாரி ஓட்டுநருக்கு அபராதம் விதித்து பேரூாட்சி செயல்அலுவலா் நடவடிக்கை மேற்கொண்டாா்.

நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ள செப்டிங் டேங்கில் அதிகளவு தேங்கிய கழிவுநீரை தொழிலாளா்கள் சிலா் மின் மோட்டாா் மூலம் கழிவுநீரை உறிஞ்சி டேங்கா் லாரிகள் மூலம் எடுத்துச்சென்று அனுமதி இல்லாமல் ஊருக்கு வெளியில் சாலை ஓரம் உள்ள பள்ளங்களிலும், ஏரிகால்வாய் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களிலும் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனா். இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீா்கேடு நிலவி வருகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி அணுகுசாலையில் சண்டியூா் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் டேங்கா் லாரியில் கொண்டுவரப்பட்ட கழிவுநீரை விட முயற்சி செய்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து நாட்டறம்பள்ளி பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் முனிரத்தினத்தினம் சம்பவ இடம் சென்று விசாரித்து செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து செயல் அலுவலா் மலா்மாறன் கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ரமேஷ் என்பவரை எச்சரித்து ரூ.3,000 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டாா்.