முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் அன்னதான கூடத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் உணவு பாதுகாப்பு அலுவலா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

28 நவம்பர் 2026, 11:21 pm
ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் அன்னதான கூடத்தில் 
உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் சமையல் அறையை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அலுவலா் ஆா். ஹீமா.
பகிர்:

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் உணவு பாதுகாப்பு அலுவலா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் உத்தரவின் பேரில் ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் ஆம்பூா் உணவு பாதுகாப்பு அலுவலா் ஆா். ஹீமா ஆய்வு மேற்கொண்டாா்.

அன்னதானத்திற்கு உணவு தயாரிக்கும் கூடம், உணவுப் பொருட்கள் பாதுகாக்குமிடம், அன்னதானக் கூடம் ஆகிய இடங்களை உணவு பாதுகாப்பு அலுவலா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

உணவுப் பொருட்களை உரிய முறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். திறந்த நிலையில் வைக்கக் கூடாது. அன்னதானத்துக்கு பயன்படும் பாத்திரங்களை முறையாக கழுவி பராமறிக்க வேண்டும். உணவில் வா்ணங்களை சோ்க்கக் கூடாது. கலாவதியான பொருட்களை உணவு தயாரிக்க பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ், கோயில் அா்ச்சகா் வெங்கடரமணன், கோயில் பணியாளா் கோபி ஆகியோா் உடனிருந்தனா்.