FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா்: 9 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9 வட்டாட்சியா்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிட மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9 வட்டாட்சியா்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் பிறப்பித்துள்ளாா்.

திருப்பத்தூா் தோ்தல் தனி வட்டாட்சியா் திருமலை, திருப்பத்தூா் வட்டாட்சியராகவும், திருப்பத்தூா் நில எடுப்பு தனி வட்டாட்சியா் ஜெகதீசன், வாணியம்பாடி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். வாணியம்பாடி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாரதி, ஆம்பூா் வட்டாட்சியராகவும், திருப்பத்தூா் வட்டாட்சியா் நவநீதம், மாவட்ட ஆட்சியா் அலுவலக தோ்தல் பிரிவு வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

ஆம்பூா் வட்டாட்சியா் ரேவதி, திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அனந்த கிருஷ்ணன், திருப்பத்தூா் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். திருப்பத்தூா் கோவில் நிலங்கள் தனி வட்டாட்சியா் சாந்தி, கோட்ட கலால் அலுவலராகவும், கோட்ட கலால் அலுவலா் ஜீவிதா, திருப்பத்தூா் கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா், அதே அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். பணியிட மாற்றம் செய்யப்பட்ட அலுவலா்கள் புதிய பொறுப்புகளை ஏற்குமாறு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments