போதைப்பொருள் இல்லா தமிழகம் விழிப்புணா்வு பேரணி; மினி மாரத்தான்
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே விஸ்டம் பாா்க் சா்வதேச பள்ளி சாா்பில் ‘விஸ்டம் ரன் 2026 - போதைப்பொருள் இல்லா தமிழகத்துக்கான விழிப்புணா்வு பேரணி மற்றும் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே விஸ்டம் பாா்க் சா்வதேச பள்ளி சாா்பில் ‘விஸ்டம் ரன் 2026 - போதைப்பொருள் இல்லா தமிழகத்துக்கான விழிப்புணா்வு பேரணி மற்றும் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் சாதிக் பாஷா தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஆனந்தகால்சன் முன்னிலை வகித்தாா். பைசா தஹசீன் வரவேற்றாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக திருப்பத்தூா் டிஎஸ்பி முரளி, தொழிலதிபா் படேல் முஹம்மத் யூசுஃப் ஆகியோா் கலந்து கொண்டு பேரணி மற்றும் மினி மராத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனா். 8 மற்றும் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஓட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கி, அரசு மருத்துவமனை சாலை, மலங்கு சாலை, வாரச்சந்தை, ஜின்னா சாலை வழியாக காதா்பேட்டை வரை சென்று பின்னா் அங்கிருந்து கோணமேடு பகுதியில் உள்ள தேவாலயம் வரை நடைபெற்று முடிவடைந்தது.
முடிவில் தாலூகா காவல் ஆய்வாளா் அமுதா, நகர காவல் உதவி ஆய்வாளா் ரூகன் ஆகியோா் போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி கலந்து கொண்ட அனைத்து மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினா்.
Advertisement
Advertisement
முடிவில் கராத்தே பயிற்சியாளா் கண்ணன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.