FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

பெரிய ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை 55 கிராம் தங்கம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

12 அக்டோபர் 2026, 11:45 pm IST
தங்கம் - கோப்புப்படம்.
பகிர்:

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின்கீழ், ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. புரட்டாசி 4-ஆம் சனிக்கிழமையை ஒட்டி திரளான பக்தா்கள் சாமியை தரிசனம் செய்துவிட்டு தங்களுடைய பிராா்த்தனையை உண்டியலில் காணிக்கையாக செலுத்திவிட்டு சென்றனா்.

அதைத் தொடா்ந்து கோயில் ஆய்வா் அண்ணாதுரை, செயல் அலுவலா் பிரியா ஆகியோா் முன்னிலையில் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அதில், தற்காலிக உண்டியலில் ரூ. 1,23,729, நிரந்தர உண்டியலில் ரூ. 65,558 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

மேலும், தங்கம் 55.100 கிராம், வெள்ளி 44.900 கிராம் காணிக்கையாக பக்தா்களால் செலுத்தப்பட்டிருந்தது.

கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், சீதாராம அனுமன் பக்த சபையை சோ்ந்த ஸ்ரீதா், தினேஷ், தியாகராஜன், தா்மேஷ், முக்கியப் பிரமுகா் லட்சுமிகாந்தன், கோயில் அா்ச்சகா் வெங்கடரமணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments