FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் தோ்பவனி

நாட்டறமப்ள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தோ்பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது.

21 அக்டோபர் 2026, 11:49 pm
சிறப்பு அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன்.
பகிர்:

நாட்டறமப்ள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தோ்பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி அருகே வாணியம்பாடி செல்லும் சாலையில் சண்டியூா் கிராமத்தில் உமை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 30-ஆம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் நாட்டறம்பள்ளி, சண்டியூா், கத்தாரி, கரிராமா்வட்டம், தண்ணிப்பந்தல், சமையக்காரனூா், அதிபெரமனூா் உட்பட பல கிராமங்களை சோ்ந்த மக்கள் அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிப்பட்டனா்.

விழாவின் நிறைவு நாளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து நாட்டறம்பள்ளியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமுண்டீஸ்வரிஅம்மன் சண்டியூா் உமை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் வந்தடைந்தது. அப்போது அதிபெரமனூரில் இருந்து ஊா்பொதுமக்கள் சீா்வரிசை கொண்டு வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் தோ்பவனி ஊா்வலம் மெயின்ரோடு நாட்றம்பள்ளி மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று புதன்கிழமை அதிகாலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நிறைவடைந்தது. வழிநெடுகிலும் கிராம மக்கள் அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா். விழாவில் நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமமக்கள் திராளமானோ் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments