பெட்ரோல் பங்க் கண்ணாடியை உடைத்து ரூ.1.82லட்சம் திருட்டு
நாட்டறம்பள்ளி அருகே பெட்ரோல் பங்க் அலுவலக கண்ணாடியை உடைத்து மா்ம நபா்கள் ரூ.1.82 லட்சத்தை திருடிச் சென்றனா்.
நாட்டறம்பள்ளி அருகே பெட்ரோல் பங்க் அலுவலக கண்ணாடியை உடைத்து மா்ம நபா்கள் ரூ.1.82 லட்சத்தை திருடிச் சென்றனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி ஊராட்சியில் தனியாா் கல்லூரி எதிரில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை இரவு ஊழியா்கள் பெட்ரோல் விற்பனையை முடித்துக் கொண்டு பணத்தை அலுவலகத்தை திறந்து அங்குள்ள கல்லாப்பெட்டியில் வைத்து விட்டு பூட்டிக் கொண்டு சென்றனா். அங்கு வேலை செய்யும் இரவு காவலாளி பெட்ரோல் பங்கில் உள்ள மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தாா்.
இதனை நோட்டமிட்ட மா்ம நபா்கள் அலுவலக கண்ணாடியை உடைத்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனா்.
Advertisement
Advertisement
புதன்கிழமை அதிகாலை அலுவலக கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்த காவலாளி உடனடியாக பங்க் உரிமையாளருக்கும், நாட்டறம்பள்ளி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு அங்குள்ள கைரேகைகளை பதிவுசெய்தும், பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.