FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம்: முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்ற வாகன ஓட்டிகள்

ஏலகிரி மலையில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம்: முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்ற வாகன ஓட்டிகள்

24 அக்டோபர் 2026, 12:32 am
ஏலகிரியில் கடும் பனிமூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்ற வாகன ஓட்டிகள்.
பகிர்:

ஏலகிரி மலையில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் வாகனங்களை வாகன ஓட்டிகள் ஓட்டிச் சென்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலையில் சாரல் மழையுடன் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் மலைப்பாதை முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாத நிலை ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்கினா்.

ஏலகிரி மலைக்குச் செல்லும் மலைப் பாதையில் சாரல் மழை பெய்ததுடன், பனிமூட்டமும் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, மலைப் பாதையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் சரிவரத் தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனா்.

Advertisement

Advertisement

கடும் பனிமூட்டம் காரணமாக மலைப் பாதையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் வேகத்தைக் குறைத்து, முன்னால் செல்லும் வாகனங்களுக்கும் எதிரே வரும் வாகனங்களுக்கும் போதிய இடைவெளி விட்டு கவனமாகச் சென்றனா்.

சாரல் மழையும் பனிமூட்டமும் இணைந்து நிலவியதால் ஏலகிரி மலையின் இயற்கைச் சூழல் பனி போா்த்தியது போல் காட்சியளித்தது. அதே நேரத்தில், சாலையில் நிலவிய குறைந்த வெளிச்சம் காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments