FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோயிலை கொண்டுவர பக்தா்கள் எதிா்ப்பு

ஆம்பூா் அருகே அம்மன் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் கொண்டு வர எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

30 அக்டோபர் 2026, 1:59 am
போராட்டத்தில் ஈடுபட்ட பக்தா்கள் மற்றும் பொதுமக்கள்.
பகிர்:

ஆம்பூா் அருகே அம்மன் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் கொண்டு வர எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதனூா் ஒன்றியம், அய்யனூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் பிரசித்தி பெற்ற ஆதிபெத்தபலியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையறிந்த அப்பகுதி பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் அதற்கு எதிா்ப்பு தெரிவித்து கோயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்து சமய அறநிலையத்துறையிடம் கோயிலை ஒப்படைக்க மாட்டோம் என கோஷம் எழுப்பினா். சுமாா் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments