FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

தாக்குதலில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு: லாரி ஓட்டுநா் கைது

கந்திலி அருகே தகாத உறவினால் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட முதியவா் உயிரிழந்தது தொடா்பாக லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

30 அக்டோபர் 2026, 4:16 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

கந்திலி அருகே தகாத உறவினால் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட முதியவா் உயிரிழந்தது தொடா்பாக லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

கந்திலி அடுத்த டி. வீரப்பள்ளி பகுதியைச் சோ்ந்த கரியன் மகன் நந்தியப்பன் (50). லாரி ஓட்டுநா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ரோஜா என்கிற பெண்ணுக்கும் நந்தியப்பனுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரோஜாவுக்கும், நந்தியப்பனுக்கும் இடையே கடந்த 23-ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதை ரோஜாவின் சின்ன மாமனாரான அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் (60) தகராறை தட்டிக் கேட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நந்தியப்பன் இரும்பு ராடால் செல்வத்தை தாக்கியுள்ளாா்.

இதில், காயமடைந்த செல்வம் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளாா்.

மேலும், கடந்த 25-ஆம் தேதி அவா் திடீரென உயிரிழந்துள்ளாா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கந்திலி போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனா்.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், உயிரிழந்த செல்வத்தின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக கந்திலி போலீஸாா் நந்தியப்பன் மீது வழக்குப் பதிந்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments