FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 13 கடைகளுக்கு "சீல்'

பூந்தமல்லி நகராட்சிக்கு ஓராண்டாக வாடகை செலுத்தாத 13 கடைகளுக்கு திங்கள்கிழமை "சீல்' வைக்கப்பட்டது.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

பூந்தமல்லி நகராட்சிக்கு ஓராண்டாக வாடகை செலுத்தாத 13 கடைகளுக்கு திங்கள்கிழமை "சீல்' வைக்கப்பட்டது.

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் நகராட்சிக்குச் சொந்தமான 37 கடைகள் தனியாருக்கு வாடகை விடப்பட்டுள்ளது.

இதில் 21 கடைகளின் வாடகைதாரர்கள் கடந்த ஓராண்டாக்கும் மேலாக வாடகைக் கட்டணத்தை நகராட்சியில் செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் நகராட்சிக்கு வரவேண்டிய ரூ. 18 லட்சத்து 16 ஆயிரம் வாடகை பணம் வராமல் நிலுவையில் இருந்துள்ளது.

Advertisement

Advertisement

வாடகைப் பணத்தை செலுத்துமாறு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வாடகைதாரர்கள் பணத்தை செலுத்தாததால் போலீஸார் பாதுகாப்புடன் திங்கள்கிழமை சென்ற நகராட்சி நிர்வாகத்தினர் வாடகைப் பணம் செலுத்தாத கடைகளுக்கு "சீல்' வைக்கத் தொடங்கினர்.

அப்போது நிலுவையில் இருந்த 8 கடைகளின் வாடகை உடனடியாகச் செலுத்தப்பட்டது. இதனால் ரூ. 2 லட்சத்து 6 ஆயிரம் வாடகைப் பணம் வசூலானது. மேலும் வாடகை செலுத்தாத 13 கடைகளுக்கு "சீல்' வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments