அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கவுள்ள ’அர்னாப்’ புயல்.
மத்திய கிழக்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
மத்திய கிழக்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்கிழக்கு நோக்கி நகர்ந்து, நேற்று (அக். 24 ) வடமேற்கே ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து (அந்தமான் தீவுகள்) சுமார் 470 கி.மீ. தொலைவிலும் தென்கிழக்கே விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) 860 கி.மீ. தொலைவிலும் காக்கிநாடாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) 950 கி.மீ. தொலைவிலும் கிழக்கே மச்சிலிப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) 1,060 கி.மீ. மற்றும் பாபட்லாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) 1,130 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
Advertisement
Advertisement
இது தெற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (அக். 25) மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் படிப்படியாக நகரும்.
தொடர்ந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக். 26 ஆம் தேதி காலைக்குள் மேலும் வலுப்பெற்று புயலாகவும், அக்டோபர் 27 ஆம் தேதி காலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் தீவிர புயலாகும் புயலாகவும் வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது.
பின்னர், இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறி, அக். 28 ஆம் தேதி காலை வாக்கில் ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகே மத்திய மேற்கு வங்கக் கடலை அடைய அதிக வாய்ப்புள்ளது.
இது பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரையை அடையும் போது குறைந்தபட்சமாக மணிக்கு மணிக்கு 115-125 கி.மீ. வேகத்துடனும் அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ. வேகத்துடனும் அதி தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The India Meteorological Department has said that the low-pressure area over the central and adjoining southeastern Bay of Bengal is likely to make landfall as a very severe cyclonic storm.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.