மார்க்சிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்
மணல் கொள்ளையைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.எஸ். சம்மந்தம் தலைமையில் திருத்தணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணல் கொள்ளையைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.எஸ். சம்மந்தம் தலைமையில் திருத்தணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது ஊத்துக்கோட்டை வட்டம், புண்ணபாக்கம் கிராமத்தில் மணல் கொள்ளையைத் தடுக்கப் போராடியவர்கள் மீது பொய் வழக்குப் போடப்பட்டதைக் கண்டித்தும், அந்த வழக்கை வாபஸ் பெறக் கோரியும், திருத்தணி ரயில் நிலையத்தில் உடனடியாக மின்விளக்குகள் அமைக்கக் கோரியும் நிர்வாகிகள் பேசினர். இதில், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரியில்...
Advertisement
Advertisement
பொன்னேரி, செப் 14: வெங்கல் அருகே மணல் குவாரியை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் போட்டதைக் கண்டித்து பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெங்கல் அருகே புன்னப்பாக்கத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அண்மையில் அனுமதி அளித்தது.
விவசாயத்தைப் பாதிக்கும் இந்த மணல் குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி அந்தப் பகுதி மக்கள் கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டம் நடத்திய 17 பேரை வெங்கல் போலீஸார் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.