பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி அமைப்பாளர் பிரபாகரன், மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி அமைப்பாளர் பிரபாகரன், மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரை அடுத்த உளுந்தை காலனியைச் சேர்ந்தவர் தயாளன் மகன் பிரபாகரன் (28). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி அமைப்பாளராக இருந்தார். இவர் மீது திருநின்றவூர், அரக்கோணம் உள்பட பல காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், தனக்குச் சொந்தமான உளுந்தையில் இருந்து வயலூர் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் உள்ள கிடங்குக்கு பிரபாகரன் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் சென்றார். பிறகு, கிடங்கின் இரவுக் காவலாளியான அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரை அழைத்து, மது வாங்கி வருமாறு கூறி பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார்.
Advertisement
Advertisement
பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்தி விட்டு அங்கேயே தூங்கி விட்டனர். மது மயக்கம் தெளிந்த பிறகு நள்ளிரவு 12 மணியளவில் நண்பர்கள் அங்கிருந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, அந்த வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், பிரபாகரனை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் பிரபாகரன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதையறிந்த மப்பேடு உதவி ஆய்வாளர் பலராமன், போலீஸார் விரைந்து சென்று நிகழ்விடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், திருவள்ளூர் எஸ்பி சாம்சன், டிஎஸ்பி, விஜயகுமார் ஆகியோரும் நிகழ்விடத்தைப் பார்வையிட்டனர்.
தொடரும் கொலைகள்: கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த தென்னரசு, வெங்கல் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் உறவினர் திருமணத்துக்கு வந்தபோது வெட்டிக் கொலை செய்யப்ட்டார்.
தற்போது அதே கட்சியின் திருவள்ளூர் தொகுதி அமைப்பாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.