வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு
தில்லியில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் வாக்குரிமை பேரணியில் அனைவரும் பங்கேற்க ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருப்பது பற்றி...
தில்லியில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் வாக்குரிமை பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "நமது வாக்குகள் திருடப்படுகின்றன. இதை எக்காரணம் கொண்டும் நாம் அமைதியாகப் பொறுத்துக்கொள்ள மாட்டோம். வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. விதிகளும் சட்டங்களும் மீறப்பட்டுள்ளன. கேள்வி கேட்டவர்கள் மீது லத்தி பிரயோகிக்கப்பட்டது. இப்போது நாடு பதிலளிக்கும்.
எனவே, நவம்பர் 1-ஆம் தேதி தில்லி நோக்கிச் செல்வோம்! வாக்கைப் பாதுகாப்போம் - நாட்டைக் காப்போம், மக்கள் பேரணி மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம். மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் வணிகர்கள் என ஜனநாயகத்தில் அக்கறை கொண்ட அனைவரும் கண்டிப்பாக வர வேண்டும்.
Advertisement
Advertisement
வாக்கு உங்களுடையது. இந்தப் போராட்டமும் உங்களுடையது தான்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தி அதிக மக்களிடம் கொண்டு சேர்க்க உதவியதற்காக பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அத்துடன், பேரணிக்கு எஞ்சியுள்ள நாட்களிலும் இதே போன்று செயலாற்றுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். தில்லி ராம்லீலா திடலில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தப் பிரம்மாண்ட பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Congress leader Rahul Gandhi on Sunday urged students, farmers, labourers, women, youth and traders to participate in the ‘Save the Vote, Save the Country Jan March and Mega Rally’ scheduled to be held at Delhi’s Ramlila Maidan on November 1, alleging that names had been removed from voter lists and rules and laws had been violated.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.