FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்தி

தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக ராகுல் குற்றச்சாட்டு...

12 அக்டோபர் 2026, 1:11 pm IST
ராகுல் காந்தி - ANI
பகிர்:

தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம் நோக்கி இன்று பேரணியாகச் செல்கின்றனர்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பேசியதாவது:

Advertisement

Advertisement

”தில்லியில் கடந்த சில நாள்களாக வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. தில்லி ஏன் ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்பதே கேள்வி. மக்கள் நகருக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. ரயில்களிலும் பேருந்துகளிலும் அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். தில்லி ஒரு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது.

தில்லி சாலைகளில் 20,000 முதல் 30,000 வரையிலான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஒரு பெரும் தவறைச் செய்து வருகிறது. ஞானேஷ் குமாரை பாதுகாக்க மோடி விரும்புகிறார் என்பதை நாட்டுக்கு உணர்த்த விரும்புகிறோம். அவருக்கு எவ்வளவு அதிகப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறதோ, அந்தளவுக்கு இறுதியில் அவரை இயக்குபவரை எங்களால் நெருங்க முடியும்.

இளைஞர்களைத் தாக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுவதாலும், அதேவேளையில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்குத் தடையற்ற சுதந்திரம் அளிக்கும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாலும் காவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன.

50 சதவிகித காவல் துறையினர், நாங்கள் செய்வது சரி என்றும், எங்கள் பணியைத் தொடர வேண்டும் என்று எங்களிடம் கூறுகின்றனர். மக்களும், பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் ஒரு பக்கம், நரேந்திர மோடி, அமித் ஷா, அஜித் தோவல், ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையத்தின் 4-5 உறுப்பினர்கள் மறுபுறம். இந்த இடைவெளியை நாங்கள் அதிகரித்து வருகிறோம்.

இந்திய ஜனநாயகமும் தேர்தல் நேர்மையும் படுகொலை செய்யப்படுவது குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து, காங்கிரஸ் தலைவரும் நானும் இந்தியத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினோம். அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, இது தொடர்பாக ஒரு மனுவைத் தாக்கல் செய்யுமாறு எங்களுக்கு அறிவுறுத்தினார். இன்று, இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இணைந்து நான் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று இந்த மனுவைத் தாக்கல் செய்யவுள்ளேன்.

நரேந்திர மோடியிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அமலாக்கத் துறை , சிபிஐ மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் உட்பட உங்கள் அரசாங்கத்தைச் சேர்ந்த 200 அதிகாரிகள் எங்களுடன் தொடர்பில் இருந்து எங்களுக்குத் தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கன்னாட் பிளேஸில் உள்ள பரகம்பா சந்திப்பில் எங்களுடன் இணையுங்கள். அரசியலமைப்பைப் பாதுகாக்க விரும்பும் எந்தவொரு கட்சியினரும் இதில் இணையலாம்.

ஏதேனும் காரணத்தினால் உங்களால் நேரடியாக எங்களுடன் இணைய முடியாவிட்டால், நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் முன் மனு தாக்கல் செய்யும்போது உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

Delhi has been turned into a prison! — Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments