முகப்பு

இந்திய அரசியலமைப்பு என்பது அநீதிக்கு எதிரான ஆயுதம்! ராகுல் காந்தி

அரசியலமைப்பு நாளை முன்னிட்டு ராகுல் காந்தி பதிவு...

48 வினாடிகள் முன்பு
இந்திய அரசியலமைப்பு என்பது அநீதிக்கு எதிரான ஆயுதம்! ராகுல் காந்தி
ராகுல் காந்தி (கோப்புப்படம்) - ANI
பகிர்:

இந்திய அரசியலமைப்பு என்பது அநீதிக்கு எதிரான ஆயுதம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை பதிவிட்டுள்ளார்.

1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவ. 26 ஆம் தேதி அரசியலமைப்பு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அரசியலமைப்பு நாளை முன்னிட்டு ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

“இந்திய அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் மட்டுமல்ல, இந்த தேசத்தின் ஆன்மா.

இது ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் கேடயம், ஒவ்வொரு குரலுக்கும் வலிமை சேர்க்கும், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் காவலன்.

இதுவே நமது ஜனநாயகத்தின் அடித்தளம். அநீதிக்கு எதிரான நமது மிகப்பெரிய ஆயுதம்.

அரசியலமைப்பு நாளில், நான் மீண்டும் ஒரு உறுதிமொழியை எடுக்கிறேன். எத்தகைய சூழலிலும் நாம் இதைப் பாதுகாப்போம். ஒவ்வொரு இந்தியனின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்.

அரசியலமைப்பு வாழ்க, இந்தியா வாழ்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

The Indian Constitution is a weapon against injustice! – Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.