FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெண் கொலையில் தொடர்பு: சிக்கிம் ஆளுநரை பதவியிலிருந்து நீக்க ராகுல் காந்தி கடிதம்!

சிக்கிம் மாநில ஆளுநர் மீது கொலை குற்றச்சாட்டு உள்ளதால் அவரை பதவியிலிருந்து நீக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

15 அக்டோபர் 2026, 7:43 pm IST
துஷ்யந்த் கௌதம் / ராகுல் காந்தி
பகிர்:

சிக்கிம் மாநில ஆளுநர் மீது கொலை குற்றச்சாட்டு உள்ளதால் அவரை பதவியிலிருந்து நீக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரகண்டின் பௌரி மாவட்டத்தில் வனாந்தரா விடுதியில் வரவேற்பாளராகப் பணியாற்றி வந்த அங்கிதா கடந்த 2022 ஆம் ஆண்டு செப். 18 ஆம் தேதி காணாமல் போன நிலையில், அவரது உடல் சிலா கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இதன் பின்னால் இருந்த குற்றவாளிகளுக்கு அரசியல் பின்புலம் காரணமாக வழக்கு விசாரணையிலும் முரண்பாடு இருந்தது.

இந்த வழக்கில், பாஜக தலைவராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா உள்ளிட்ட மூவர் மீது குற்றம்சாட்டப்பட்டு, கொலை செய்தல், தடயங்களை மறைத்தல், துன்புறுத்தல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிறகு மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

முதல்கட்ட தகவலின் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த அங்கிதாவை, விடுதி உரிமையாளர் புல்கித் ஆர்யா கொலை செய்து கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்த பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தக் கொலைக்கும் தற்போது சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் துஷ்யந்த் கௌதமுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அங்கிதா பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பதால், அவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் அங்கிதா பண்டாரியின் பெற்றோரை தில்லி போலீசார் கைது செய்து விடுவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவரை வழக்கு விசாரணை முடியும் வரை பதவியில் இருந்து நீக்கக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “ஒரு முக்கியப் பிரமுகரிடம் தனது கண்ணியத்தை விட்டுக் கொடுக்க மறுத்ததால் அங்கிதா பண்டாரி என்கிற 19 வயதுப் பெண் கொல்லப்பட்டார்.

கொலை நடைபெற்று 4 ஆண்டுகள் கடந்த பின்னரும், சிபிஐ-யின் மந்தமான விசாரணையால், அந்த முக்கியப் பிரமுகர் யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

இந்த வழக்கில் துஷ்யந்த் கௌதமிற்கு தொடர்பு இருப்பதாக அங்கிதாவின் குடும்பத்தினர் உள்பட பலரும் நம்புகின்றனர்.

இதுபோன்ற சூழலில், அவர் சிக்கிம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநராகப் பதவியில் இருப்பவர் மீது எந்தவொரு குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாது.

துஷ்யந்த் கௌதமை ஆளுநராக நியமிக்கபரிந்துரைத்ததன் மூலம், பெண்களுக்கு எதிரான பாதுகாப்பில் துளியும் அக்கறை இல்லை என்று பிரதமர் மோடி மீண்டும் நிரூபித்துள்ளார்.

துஷ்யந்த் கௌதமின் நியமனம் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அரசுக்கு அறிவுறுத்துமாறும், விசாரணை முடியும் வரை அவர் பதவியேற்பதைத் தடுத்து நிறுத்துமாறும் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

அங்கிதாவின் பெற்றோருக்கு நீதியின் மீதுள்ள நம்பிக்கையைச் சிதைக்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Sikkim Governor embroiled in murder accusation: Rahul Gandhi writes to the President seeking his removal!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments