மாபெரும் பேரணி... உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த இந்தியா கூட்டணித் தலைவர்கள்!
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேரணியாக வந்து உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது குறித்து...
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேரணியாக வந்து உச்சநீதிமன்றத்தில் இன்று (அக். 12) மனு அளித்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இதனால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் உரிய விசாரணை நடத்தி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த இந்தியா கூட்டணி தலைவா்கள், ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு குறித்து எடுத்துரைத்தனா். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான தங்களின் கவலைகளையும் அவா்கள் முன்வைத்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் எம்.பி.க்களும் இன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று, தலைமை நீதிபதியைச் சந்தித்து புகார் அளிக்க திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி இன்று இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேருந்தில் பேரணியாகச் சென்றனர். இதில் இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், அகிலேஷ் யாதவ், அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
INDIA Bloc protest march Lok Sabha LoP Rahul Gandhi arrives at the Supreme Court filed petition
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.