FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

‘குறிவைக்கப்படும் முஸ்லிம் வாக்காளர்கள்: பாஜக - தேர்தல் ஆணையத்தின் வெட்கமற்ற செயல்’ - ராகுல் கடும் கண்டனம்!

பாஜக - தேர்தல் ஆணையமும் சேர்ந்து வாக்குத்திருட்டு என்னும் வெட்கமற்ற செயலில் தொடர்ந்து ஈடுபடுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி - கோப்புப்படம்
பகிர்:

பாஜக - தேர்தல் ஆணையமும் சேர்ந்து வாக்குத்திருட்டு என்னும் வெட்கமற்ற செயலில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கர்நாடகத்தின் பல சட்டப்பேரவைத் தொகுதிகளில், பெரும்பாலும் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குமாறு, மொத்தமாக படிவம் 7 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்க கோரிக்கை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் கர்நாடகத்தின் பெலகாவியில் செப். 23 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்ற முகாமில் முஸ்லிம் வாக்காளர்களைக் குறிவைத்து படிவம்-7-ஐ நிரப்பி அதில் வலுக்கட்டாயமாகக் கையொப்பமிட வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பெலகாவியைச் சேர்ந்தவர் ஒருவர் பகிர்ந்த விடியோவை மறுபதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்குத்திருட்டு பாஜக - தேர்தல் ஆணையத்தின் வெட்கமற்ற செயல் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “வாக்குத் திருட்டு குறித்து நாடு முழுவதும் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர். ஆனாலும், பாஜக-தேர்தல் ஆணையத்தின் வெட்கமற்ற செயலைப் பாருங்கள்.

அவர்கள் வெளிப்படையாக அதே செயல்களைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். கர்நாடகத்தின் பெலகாவியில், ஒரேயடியாக சுமார் 15,000 வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் சதித்திட்டம் நடந்துள்ளது. வெறும் மூன்று நாள்களில் செப். 22, 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்க, படிவம்-7 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் முஸ்லிம்கள், பட்டியல் - பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அவர்கள் குறிவைத்துள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Rahul Gandhi has sharply criticized the BJP and the Election Commission for continuously engaging in the shameless act of vote theft.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments