FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி அமைப்பாளர் பிரபாகரன், மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி அமைப்பாளர் பிரபாகரன், மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூரை அடுத்த உளுந்தை காலனியைச் சேர்ந்தவர் தயாளன் மகன் பிரபாகரன் (28) . இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி அமைப்பாளராக இருந்தார்.

இவர் மீது திருநின்றவூர், அரக்கோணம் உள்பட பல காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தனக்குச் சொந்தமான உளுந்தையில் இருந்து வயலூர் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் உள்ள கிடங்குக்கு பிரபாகரன் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் சென்றார். பிறகு, கிடங்கின் இரவுக் காவலாளியான அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரை அழைத்து, மது வாங்கி வருமாறு கூறி பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார்.

பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்தி விட்டு அங்கேயே தூங்கி விட்டனர். மது மயக்கம் தெளிந்த பிறகு நள்ளிரவு 12 மணியளவில் நண்பர்கள் அங்கிருந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகு, அந்த வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், பிரபாகரனை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் பிரபாகரன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதையறிந்த மப்பேடு உதவி ஆய்வாளர் பலராமன், போலீஸார் விரைந்து சென்று நிகழ்விடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments