திருநங்கைகள் விவரங்களைப் பதிவு செய்யலாம்
மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் தங்களது முழு விவரங்களை திருவள்ளூர் மாவட்ட சமூக
மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் தங்களது முழு விவரங்களை திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு சார்பில் திருநங்கைகளுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் 2018-19 ஆண்டுக்கான திருநங்கைகள் பற்றிய விவரம், கணக்கெடுப்பு, புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு வசித்து வரும் திருநங்கைகள் தங்கள் விவரங்களை மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்யலாம். இப்பதிவு பணியை அடுத்து வரும் இரு மாதங்களுக்குள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் 044-27663912 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.