விவசாயிகளுக்கு 75% மானியத்தில் புல்வெட்டும் கருவி
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர் பயன்பெறும் நோக்கத்தில் மின்சாரத்தில் இயங்கும்
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர் பயன்பெறும் நோக்கத்தில் மின்சாரத்தில் இயங்கும் புல்வெட்டும் கருவியை 75 சதவீத மானியத்தில் வழங்க இருப்பதாக கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் நோக்கத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டில்
20 பேருக்கு மானிய விலையில் மின்சாரத்தில் இயங்கும் புல் வெட்டும் கருவிகளை வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கருவியின் விலை ரூ.20
ஆயிரம் ஆகும். இதில், அரசு மானியமாக ரூ.15 ஆயிரமும், பயனாளியின் பங்குத் தொகையாக ரூ.5 ஆயிரமும் இருக்கும். இதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரியினையும் பயனாளிகளே செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், குறைந்தபட்சம் இரண்டு மாடுகள் வைத்திருப்பவராகவும், குறைந்தபட்சம் அரை ஏக்கரில் தீவனப் பயிர் சாகுபடி செய்பவராகவும் இருப்பது அவசியம். இத்திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்தகுதிகள் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு புல் வெட்டும் கருவி தேவைப்பட்டால் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவரையோ அல்லது ஆவின் கால்நடை மருத்துவரையோ நேரில் தொடர்பு கொண்டு, வரும் ஜூலை15-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.