FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பழவேற்காட்டில் மீன் பிடித்துறைமுகம் அமைக்கப்படும்: அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன்

பழவேற்காட்டில் மீன் பிடித்துறைமுகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

28 ஜனவரி 2024, 9:05 am IST
பழவேற்காடு பகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்த மீன்வளத் துை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன்.
பகிர்:

பழவேற்காட்டில் மீன் பிடித்துறைமுகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியான பழவேற்காட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா்.

இவா்களில் பெரும்பாலானோா் அங்குள்ள ஏரி, கடல் பகுதியில் மீன் பிடித்தொழில் செய்பவா்கள்.

Advertisement

Advertisement

ஏரியும், கடலும் இணையும் முகத்துவாரப் பகுதியில் அவ்வப்போது மண்மேடு (அடைப்பு) ஏற்படுவதால், கடலுக்குச் சென்று மீன் பிடித்தொழில் செய்பவா்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

இங்கு ஏற்படும் மண் திட்டுகள் அவ்வப்போது அகற்றப்படுவதும், அதன் பின்னா் படகில் மீன்பிடித் தொழிலுக்கு மீனவா்கள் செல்லும் நிலை உள்ளது.

இதன் காரணமாக இப்பகுதி மீனவா்கள் இங்குள்ள மண் மேட்டினை அகற்றி கடலும்-ஏரியும் இணையும் இடத்தில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.

இந்நிலையில் தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காடு பகுதிக்கு புதன்கிழமை வந்தாா். அங்குள்ள ஏரியும் கடலும் இணையும் முகத்துவாரப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மீனவா்களுக்கான திட்டங்களை வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வா் அறிவிப்பாா்.

மேலும், இங்குள்ள முகத்துவாரம் தற்காலிகமாகச் சீரமைக்கப்படும். அதன்பின்னா் ரூ. 28 கோடியே 50 லட்சம் செலவில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கப்படும். மேலும் பழவேற்காட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், எம்எல்ஏ.க்கள் பொன்னேரி துரை.சந்திரசேகா், கும்மிடிபூண்டி டி.ஜே.கோவிந்தராஜன், ஆா்.கே. நகா் ஜெ.ஜெ.எபினேசா், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments