மனைவி சாக்ஷியை ஏமாற்றிய தோனி!
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி - மனைவி சாக்ஷியின் விடியோ வைரலாகி வருவது குறித்து...
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, தனது மனைவி சாக்ஷியுடன் விளையாடும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத்தின் ஜாம்நகரில் தொழிலதிபர் அம்பானி குடும்பத்தின் சார்பில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, இயக்குநர் அட்லீ, கீர்த்தி சனோன், வருண் தவான், டைகர் ஷெராஃப், மௌனி ராய், ஷாகித் கபூர், திஷா பதானி உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
ரிலையன்ஸ் கிரீன்ஸ் டவுன்ஷிப்பில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.எஸ். தோனியுடன் அவருடைய மனைவி சாக்ஷியும் கலந்துகொண்டு ராட்டினம் உள்ளிட்ட சவாரிகளிலும் விளையாடினர். தொடர்ந்து, விழாவில் பங்கேற்றோருக்கு விருந்தும் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
விழாவின்போது, தனது மனைவி சாக்ஷிக்கு தோனி ஐஸ் கிரீம் ஊட்டி விடுவதுபோல ஏமாற்றும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காதல் தம்பதியான தோனி - சாக்ஷியின் இந்த விடியோவை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
MS Dhoni’s Playfully Moment With his Wife Sakshi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.