எப்போதும் பெருமை கொள்வேன் மஹி: தோனியின் ஓய்வு குறித்து சாக்ஷி!
மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து அவரது மனைவி சாக்ஷி தெரிவித்ததாவது...
மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து அவரது மனைவி சாக்ஷி, “எப்போதும் பெருமை கொள்வேன் மஹி” எனப் பதிவிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றதாக இன்று அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதுகுறித்து தோனியின் மனைவியான சாக்ஷி தெரிவித்திருப்பதாவது:
சில அழகான அத்தியாயங்களைத் தொடங்க வேண்டுமென்றால், சில அத்தியாயங்களை முடித்தாக வேண்டும்.
பல ஆண்டுகளாக உங்களை எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்திருந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி, மஹியை நேசித்து, ஆதரித்து, நம்பிய அனைவருக்கும் எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி.
இந்த அன்புக்கு நாங்கள் என்றென்றும் கடன்பட்டுள்ளோம்.
புதிய தொடக்கங்கள், புதிய பயணங்கள் மற்றும் இன்னும் பல அழகான நினைவுகளுக்காக எப்போதும் உங்களை நினைத்து பெருமை கொள்வேன் மஹி என்று சாக்ஷி குறிப்பிட்டுள்ளார்.