FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழகத்தின் அன்புக்குரிய தத்துப்பிள்ளை தோனி: மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி!

மகேந்திர சிங் தோனியை தமிழகத்தின் அன்புக்குரிய தத்துப்பிள்ளை என மு.க. ஸ்டாலின் தெரிவித்திருப்பது குறித்து...

49 வினாடிகள் முன்பு
எம்.எஸ். தோனி, மு.க. ஸ்டாலின் - கோப்புப்படம்
பகிர்:

மகேந்திர சிங் தோனியை தமிழகத்தின் அன்புக்குரிய தத்துப்பிள்ளை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (நவ. 17) புகழ்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றதாக இன்று அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவிஒல் தெரிவித்திருப்பதாவது:

சென்னைக்கு கோப்பைகளை விடவும் மேலான ஒன்றை மகேந்திர சிங் தோனி கொடுத்தார். தலைமுறைகளை ஒன்றிணைத்த ஓர் உணர்வையும், கிரிக்கெட்டை கடந்த ஒரு பிணைப்பையும் அவர் உருவாக்கினார்.

ஒரு பழமொழி சொல்வது போல, நல்ல விஷயங்கள் அனைத்தும் முடிவுக்கு வரத்தான் வேண்டும். தமிழகத்தின் அன்புக்குரிய தத்துப்பிள்ளைக்கு, முழுமையான மற்றும் தகுதியான பிரியாவிடையைக் கொடுக்க, எங்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டுமே என்று நாங்கள் ஏங்குகிறோம்.

எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களையும், புகழ்பெற்ற வெற்றிகளையும், நாங்கள் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் நினைவுகளையும் கொடுத்ததற்காக தோனிக்கு நன்றி. சிஎஸ்கேவின் ஆலோசகராக உங்களின் புதிய இன்னிங்ஸில் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம் என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

summary

DMK leader M.K. Stalin praised Mahendra Singh Dhoni on Tuesday (Nov. 17), calling him the "beloved adopted son" of Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.