கனவு போல உணர்கிறேன்... தோனி உடனான ஞாபகங்களைப் பகிர்ந்த டெவால்டு பிரெவிஸ்!
சிஎஸ்கேவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஓய்வு குறித்து டெவால்டு பிரெவிஸ் கூறியிருப்பதாவது...
சிஎஸ்கேவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நேற்று (நவ.17) தனது ஓய்வை அறிவித்தார். இது குறித்து டெவால்டு பிரெவிஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 2008 முதல் விளையாடி வந்த எம்.எஸ். தோனி 2026ல் ஓய்வு பெற்றுள்ளார். இனிமேல் ஆலோசகராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சக வீரர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் தோனி குறித்து பதிவிட்டு வருகிறார்கள். இதில் தென்னாப்பிரிக்காவின் இளம் ஏபிடி என்றழைக்கப்படும் டெவால்டு பிரெவிஸ் கூறியிருப்பதாவது:
கனவு போல உணர்கிறேன்... உங்களை முதல்முறையாக 2022ல் இளம் மும்பை இந்தியன்ஸ் அணி வீரராகச் சந்தித்தேன். உங்களை கிரிஸுக்கு பின்பாக பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுடன் சிஎஸ்கேவில் 2025, 2026 சீசன்களில் ஓய்வறையைப் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
இளம் வீரர்களுடன் நீங்கள் நேரம் ஒதுக்கி பேசுவதை நான் எப்போதுமே மறக்க மாட்டேன். முதல் போட்டிக்குப் பிறகு நீங்கள் எனக்கு அளித்த அறிவுரை எப்போதுமே என்னுடன் இருக்கிறது.
என்ன மாதிரியான ஓர் அற்புதமான பயணம். உங்களுடன் பயணித்ததுக்கு நான் சலுகைப்பெற்றவனாக உணர்கிறேன். நம்பமுடியாத ஐபிஎல் பயணத்துக்கு வாழ்த்துகள். சிஎஸ்கேவின் ஆலோசகராக நீங்கள் இருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் எனக் கூறியுள்ளார்.