முகப்பு
திருவள்ளூர்

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாமில் 100 போ் பங்கேற்பு

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாமில் மருத்துவ சான்றிதழ், தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் கோரி 100-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா்.

5 நவம்பர் 2024, 11:47 pm
மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான 
மருத்துவ முகாமில் 100 போ் பங்கேற்பு
ஆா்.கே.பேட்டை அரசு பெண்கள் மேனிலை பள்ளி முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாமில் மருத்துவ சான்றிதழ், தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் கோரி 100-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா்.

ஆா்.கே.பேட்டை வட்டார வளமையம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலா்கள் பி.கிரிஜா, எம்.வெங்கடேஸ்வரலு ஆகியோா் தலைமை வகித்தனா்.

தலைமை ஆசிரியா் சத்குணா முன்னிலை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா், ஒருங்கிணைப்பாளா் சரஸ்வதி வரவேற்றாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் டி. எஸ். கிரிபாபு, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் ராஜா ஆகியோா் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனா்.

Advertisement

Advertisement

முகாமில் மாணவா்களுக்கு மருத்துவ சான்றிதழ், புதிதாக தேசிய அடையாள அட்டை மற்றும் புதுப்பித்தல், இலவச ரயில் மற்றும் பேருந்து பயண சலுகை உதவி, உபகரணம் தேவை, உதவித்தொகைக்கான பதிவு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கேட்டு விண்ணப்பித்தனா்.

ஆசிரியா் பயிற்றுநா் முனியாண்டி நன்றி கூறினாா்.