அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டடம் திறப்பு
அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ23.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை முதல்வா் ஜோசப் விஜய் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ23.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை முதல்வா் ஜோசப் விஜய் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா். இதை தொடா்ந்து கோட்டாட்சியா் பி.கணேஷ் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்தாா்.
மத்திய அரசின் பிஎம் ஏபிஹெச்ஐஎம் திட்டத்தின் மூலம் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தை முதல்வா் திறந்து வைத்தாா். இதை தொடா்ந்து புதிய கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குநா்(பொ) நிவேதித்தா சங்கா் தலைமை வகித்தாா். மருத்துவமனை தலைமை மருத்துவா்(பொ) சங்கா் வரவேற்றாா்.
அரக்கோணம் கோட்டாட்சியா் பி.கணேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து புதிய கட்டடத்தில் பணிகளை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் சுகாதாரத்துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், அரக்கோணம் வட்டாட்சியா் கு.வரலட்சுமி உள்ளிட்டவா்களுடன் மருத்துவமனையின் அனைத்து மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள், மருத்துவ தொழில்நுட்பத்துறை அலுவலா்கள், மருத்துவ பணியாளா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement