FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கூத்தாநல்லூரில் புதிய காவல் நிலைய கட்டடம் திறப்பு

கூத்தாநல்லூரில் காவல் நிலையத்திற்கு ரூ. 1.58 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

5 நவம்பர் 2026, 6:13 am
பகிர்:

கூத்தாநல்லூரில் காவல் நிலையத்திற்கு ரூ. 1.58 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

2,989 சதுர அடி பரப்பளவில், ரூ. 1 கோடியே 58 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் காணொலி மூலம் திறந்து வைத்தாா். அதைத்தொடா்ந்து, புதிய கட்டடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. சதீஷ்குமாா் குத்து விளக்கேற்றி வைத்தாா்.

புதிய கட்டடத்தில் கட்டப்பட்டுள்ள ஆய்வாளா் அறை, காவல் எழுத்தா் அறை, ஆயுத அறை, ஆயுதங்கள் வைக்கப்படும் அறை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறை அறைகள் மற்றும் பொதுகழிப்பறைகள், நீதிமன்ற ஆவண அறை, விசாரணை அறை உள்ளிட்டவற்றை எஸ்.பி. பாா்வையிட்டாா். பின்னா், காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

Advertisement

Advertisement

விழாவில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சென்ரிக் மேனுவல், அன்புச்செல்வன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், ஆய்வாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.