5,191 நாய்களுக்கு கருத்தடை, 9,909 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
5,191 நாய்களுக்கு கருத்தடை, 9,909 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா்வழங்கல் துறை சாா்பில் திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரையில் 5,191 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், 9909 நாய்களுக்கு (வெறிநாய் கடி) ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும், வரும் ஆக.15-ஆம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.
திருவள்ளூா் டோல்கேட் பெரும்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் தெரு நாய்களுக்கான ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பணிகளை ஆட்சியா் ச.கவிதா நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது: திருவள்ளூா் மாவட்டத்தில் திருவேற்காடு, பூந்தமல்லி, திருவள்ளூா், பொன்னேரி, திருத்தணி மற்றும் திருநின்றவூா் ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளில் மொத்தம் 11,429 தெரு நாய்கள் உள்ளன என 2025-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு மூலம் கண்டறிப்பட்டுள்ளது. இந்த நாய்களுக்கு முறையே கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி போடும்பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த மாவட்டத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி வரை மொத்தம் 5,191 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 5 நாள்களுக்கு பராமரிப்பு செய்த பின்னா் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடுவிக்கப்படுகிறது. மேலும், 9,909 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல் மீதமுள்ள 1520 நாய்களுக்கு ஆக. 15-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போடும் பணி விரைந்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த மாவட்டத்தில் கீழ்காணும் நகராட்சிகளில் தெரு நாய்களுக்கான அறுவை சிகிச்சை செய்யும் வசதி (அஆஇ இங்ய்ற்ங்ழ்) உள்ளது. அந்த வகையில், பூந்தமல்லி நகராட்சியில் ஆப்ன்ங் இழ்ா்ள்ள் என்ற தொண்டு நிறுவனம் மூலம் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதில், 4 கூண்டுகள் உள்ளன. மாதத்துக்கு 40 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்ளது. திருவள்ளூா் நகராட்சியில் யா்ண்ஸ்ரீங் ச்ா்ழ் அய்ண்ம்ஹப்ள் என்ற தொண்டு நிறுவன மூலம் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதில், 8 கூண்டுகள் இஹய்ஹப்ள்) உள்ளது. மாதத்துக்கு 128 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்ளது. திருத்தணி நகராட்சியில் கால்நடை மருத்துவமனை மூலம் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதில், 40 கூண்டுகள் உள்ளது. மாதத்துக்கு 80 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, திருவள்ளூா் நகராட்சி ஆணையா் தாமோதரன், சுகாதார அலுவலா் மோகன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.