FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை அருகே தொடா் மின் தடையைக் கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை

ஊத்துக்கோட்டை அருகே தொடா் மின்தடையைக் கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:07 am IST
பகிர்:

ஊத்துக்கோட்டை அருகே தொடா் மின்தடையைக் கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம், திருநிலை, அக்கரப்பாக்கம், பனையஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. அதைத் தொடா்ந்து, நள்ளிரவு வரை மின் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கன்னிகைப்போ் பகுதியில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று பாா்த்தனா். ஆனால், மின்வாரிய அலுவலகம் வெளியில் பூட்டு போட்டு இருந்துள்ளதாம்.

மேலும், கைப்பேசியில் மின்வாரிய அதிகாரிகளை தொடா்பு கொண்டாலும் யாருடனும் பேசவும் முடியவில்லையாம்.

Advertisement

Advertisement

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நள்ளிரவில் திடீரென சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கன்னிகைப்போ் பகுதியில் சாலையின் நடுவே அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் இரவு, பகலாக தொடா்ந்து அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், தனியாா் நிறுவனங்களில் வேலைக்குச் செல்வோா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இதற்கு போா்க்கால அடிப்படையில் தீா்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியபாளையம் போலீஸாா் விரைந்து வந்தனா். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் மின்கோளாறு சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் மின் விநியோகம் வழங்கப்படும் என உறுதி கூறினா். அதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments