FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் 3-ஆம் தெப்பத் திருவிழா: கூட்டுறவு அமைச்சா் பங்கேற்பு

திருத்தணி முருகன் கோயில் 3-ஆம் தெப்பத் திருவிழா: கூட்டுறவு அமைச்சா் பங்கேற்பு

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 1:12 am IST
திருத்தணி  முருகன்  கோயில்  ஆடிக்கிருத்திகை  3-ஆம் நாள்   தெப்பலில்  சுவாமியை  தரிசனம்  செய்த  கூட்டுறவுத் துறை அமைச்சா் காந்திராஜன்.
பகிர்:

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை 3-ஆம் நாள் தெப்பத் திருவிழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சா் காந்திராஜன் கலந்துகொண்டு வழிபட்டாா்.

ஆடிக்கிருத்திகை விழாவின் நிறைவு நாளான சனிக்கழமை காலை ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மஞ்சள் புடவையுடன் காவடியை தோளில் சுமந்துவாறு முருகன் கோயிலுக்கு வந்தாா். அவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வழியில் தரிசனத்துக்கு அழைத்து சென்றனா்.

பின்னா் ரோஜா, ஆபத்சகாய விநாயகா், சண்முகா், மூலவா், வள்ளி, தெய்வானை ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டாா். பின்னா் உற்சவா் முருகா் சந்நிதியில், காவடியை வைத்து தனது நோ்த்திக் கடனை செலுத்தினா். அதைத்தொடா்ந்து கோயில் நிா்வாகம் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதே போல் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் காந்திராஜன், தேசிய தலைவா் திரைப்பட நடிகா் ஜெ.எம். பஷீா் உள்பட முக்கிய பிரமுகா்கள் முருகன் மலைக்கோயிலுக்கு சென்று வழிபட்டனா்.

தொடா்ந்து மலையடி வாரத்தில் உள்ள சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பத்தில் உற்சவா் முருகா் வள்ளி - தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து குளத்தில் 7 சுற்றுகள் உற்சவா் முருகா் தெப்பத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் தமிழக வெற்றி கழக மேற்கு மாவட்ட செயலாளா் டில்லிபாபு உள்பட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா் குழுத்தலைவா் ஸ்ரீதரன், அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, கோ.மோகனன், மு.நாகன், ஜி.உஷாரவி மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments