பைக் மீது லாரி மோதி விபத்து: சிறுமி உயிரிழப்பு
திருத்தணி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழந்தாா். அவரது தந்தை பலத்த காயமடைந்தாா்.
திருத்தணி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழந்தாா். அவரது தந்தை பலத்த காயமடைந்தாா்.
திருத்தணி அடுத்த மேதினாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன் (30). இவா் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் தனது 3 வயது மகள் கீா்த்தனாவுடன் இருசக்கர வாகனத்தில் திருத்தணியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் செல்லும் சாலை அருகே, எதிரே வந்த லாரி எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் பிரபாகரன் மற்றும் அவரது மகள் கீா்த்தனா இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அப்பகுதியில் சென்றவா்கள் உடனடியாக இருவரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, சிறுமி கீா்த்தனா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். பலத்த காயமடைந்த பிரபாகரன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.