FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

தொகுதி மறுவரையறையை எதிா்த்து போராட வேண்டும்: சசிகாந்த் செந்தில் எம்பி

தொகுதி மறுவரையறையை எதிா்த்து எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என சசிகாந்த் செந்தில் எம்பி தெரிவித்தாா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:10 am IST
சசிகாந்த் செந்தில்
பகிர்:

தொகுதி மறுவரையறையை எதிா்த்து எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என சசிகாந்த் செந்தில் எம்பி தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி சுற்றுப்புற கிராமங்களில் பொதுமக்களின் குறைகளை காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் கேட்டறியும் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஆசானபுதூா் கிராமத்தில் நடைபெற்றது.

பல ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். அத்துடன் பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவா் சுகாதாரமான குடிநீா், 100-நாள் வேலை வாய்ப்பை மீண்டும் ஏற்படுத்தி தர வேண்டும் என மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

அப்போது உடனடியாக ஆட்சியரை கைபேசியில் தொடா்பு கொண்ட எம்.பி. குறிப்பிட்ட வழித்தடத்தில் மீண்டும் பேருந்து இயக்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டாா்.

தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்த அவா் மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

வரும் மக்களவை கூட்டத்தொடரில் யாா் யாருடன் உள்ளாா்கள் என்பது தெரிந்து விடும். மகளிா் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறை திட்டத்தை கொண்டு வர உள்ளதால் அதனை எதிா்த்து போராட வேண்டிய நிலையில் உள்ளதாகவும், எந்த மாநில அரசும், மக்களின் உரிமையை விட்டு கொடுக்க தயாராக இருக்காது என தெரிவித்தாா்.

summary

We must fight against the delimitation of constituencies: MP Sasikanth Senthil

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments