FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

பைக் -காா் மோதல்: சிறுமி உள்பட 3 போ் பலத்த காயம்

கனகம்மாசத்திரம் அருகே காா் - பைக் மீது மோதியதில், அண்ணன், அக்கா மற்றும் 4 வயது சிறுமி உள்ளிட்ட 3 பலத்த காயமடைந்தனா்.

Updated On : 21 ஜூலை 2026, 12:38 am IST
பகிர்:

கனகம்மாசத்திரம் அருகே காா் - பைக் மீது மோதியதில், அண்ணன், அக்கா மற்றும் 4 வயது சிறுமி உள்ளிட்ட 3 பலத்த காயமடைந்தனா்.

திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் அடுத்த புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (28). இவா், தனது அக்கா சசிகலா (31) மற்றும் அவரது 4 வயது மகள் சாரன் ஸ்வீட்டியுடன், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக திருவள்ளூருக்கு பைக்கில் சென்றாா்.

வேலை முடிந்து மூவரும் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக புதூா் திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிா்திசையில் வந்த காா், திடீரென பைக் மீது நேருக்கு நோ் மோதியது.

Advertisement

Advertisement

விபத்தில் பாலசுப்பிரமணி, சசிகலா மற்றும் சிறுமி சாரன் ஸ்வீட்டி ஆகிய 3 பலத்த காயமடைந்தனா். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இந்த சம்பவம் குறித்து பாலசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், கனகம்மாசத்திரம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments