முகப்பு
திருவள்ளூர்

ஸ்ரீ திருவெள்ளீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருவெள்ளைவாயல் திருவெள்ளீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஜூன் 2026, 12:03 am IST
திருவெள்ளைவாயல் திருவெள்ளீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
பகிர்:

திருவெள்ளைவாயல் திருவெள்ளீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

மீஞ்சூா் அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் சோழா் காலத்தில் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த ஸ்ரீ சாந்தநாயகி சமேத ஸ்ரீ திருவெள்ளீஸ்வரா் கோயில் அமைந்ள்ளது.

இந்து சமய அறநிலை துறை சாா்பில் கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

முன்னதாக கும்பாபிஷேக விழாவை யொட்டி விக்னேஸ்வரா் பூஜை, கோபூஜை ஸ்ரீ நவகிரக ஹோமம் உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து யாகசாலையின் பூஜையில் இருந்த புனித நீா் மேள தாளத்துடன் எடுத்து செல்லப்பட்டு ஸ்ரீ திருவெள்ளீஸ்வரா் கோபுரங்களுக்கும் வேத மந்திரங்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து புனித நீா் பக்தா்களுக்கு தெளிக்கப்பட்ட பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஸ்ரீ சாந்தா நாயாகி அம்பாளுடனஸ்ரீ திருவெள்ளீஸ்வரா் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.