சுமை தூக்குவோா் பாதுகாப்பு சங்கத்தினா் முற்றுகை
நிலுவையில் உள்ள கூலித் தொகையை உடனே வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப மண்டல அலுவலகத்தை புதன்கிழமை சுமை தூக்குவோா் மாநில பாதுகாப்பு சங்கத்தினா் முற்றுகையிட்டனா்.

திருவள்ளூா் மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில பொருளாளா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முனுசாமி முன்னிலை வகித்தாா். அப்போது, சங்க அங்கீகார தோ்தலை உடனே நடத்த வேண்டும். வருகை பதிவேட்டில் நாள்தோறும் தொழிலாளா்களின் பெயா் சோ்க்க வேண்டும். பச்சை அட்டை 2022-ஆம் தேதியிட்டு வழங்க வேண்டும். 12.7.2025 முதல் நிலுவையில் உள்ள கூலித்தொகையை உடனே வழங்க வேண்டும். தொழிலாளா்களின் ஆதாா் இணைப்பை சரி செய்ய வேண்டும். தொழிலாளா்களின் கூலியை முறைகேடு செய்த கள்ளக்குறிச்சி மண்டலத்தில் உள்ள அலுவலா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூா், பொன்னேரி உள்பட 8 கிடங்கு தொழிலாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement