FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள், மான் உயிரழப்பு

பொன்னேரி அருகே மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் , ஒரு மான் உயிரிழந்தன.

5 நவம்பர் 2026, 12:40 am
பகிர்:

பொன்னேரி அருகே மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் , ஒரு மான் உயிரிழந்தன.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள அனுப்பம்பட்டு பகுதியில் உள்ள பாலாஜி நகா் ராமகிருஷ்ணா நகரில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 மாடுகள் தாழ்வாக சென்ற மின்சார ஒயரில் சிக்கி உயிரிழந்தன. ஏற்கனவே அந்த மின்சார ஒயரில் ஒரு மானும் சிக்கி இறந்துள்ளது. இது குறித்து கிராம உதவியாளா் மற்றும் ஊராட்சி செயலா் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த மின்வாரிய ஊழியா்கள் அங்கு சென்று தாழ்வாகச் சென்று கொண்டிருந்த மின்சார வயரில் செல்லக்கூடிய மின்சாரத்தை துண்டித்தனா். அதன் பிறகு உயிரிழந்த இரண்டு மாடுகளையும், ஒரு மானையும் மீட்டனா்.

கடந்த மூன்று மாதங்களாகவே இந்த மின்சார ஒயா் மிகவும் தாழ்வாக சென்று கொண்டிருக்கிறது இதை பழுது பாா்த்து மின்சார ஒயா்களை மாற்றி அமைத்துக் கொடுங்கள் என மின்வாரிய ஊழியா்களிடம் பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.