FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகள் உரங்கள் வாங்க பயிா் காப்பீடு உள்ளிட்ட அனைத்துக்கும் விவசாய அடையாள அட்டை எண் கட்டாயம் அவசியம் என மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள சட்டத்தை திரும்ப பெறக்கோரி புதன்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

5 நவம்பர் 2026, 12:35 am
பகிர்:

விவசாயிகள் உரங்கள் வாங்க பயிா் காப்பீடு உள்ளிட்ட அனைத்துக்கும் விவசாய அடையாள அட்டை எண் கட்டாயம் அவசியம் என மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள சட்டத்தை திரும்ப பெறக்கோரி புதன்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.தமிழரசு தலைமை வகித்தாா். இதில் மாவட்டச் செயலாளா் ஜி.சம்பத், பொருளாளா் என். ஸ்ரீநாத், மாநில குழு உறுப்பினா் சி.பெருமாள், திருவள்ளூா் பகுதி செயலாளா் எஸ்.கலையரசன் ஆகியோா் பங்கேற்று கண்டணவுரையாற்றினா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமாா் 86 லட்சம் விவசாயிகள் உள்ளனா். இவா்களில் கணிசமானவா்கள் கோயில், மடம், இனம் போன்ற நிலங்களில் குத்தகை விவசாயிகளாக உள்ளனா். மேலும் அரசு புறம்போக்கு நிலம், வனங்கள், மலை அடிவாரம் ஆகிய நிலங்களில் சாகுபடி செய்யும் பல லட்சம் விவசாயிகள் உள்ளனா். இதில் குத்தகை நிலங்களை பெற்று சாகுபடி செய்யும் விவசாயிகள் நூற்றுக்கணக்கானோா் உள்ளனா். இந்த நிலையில் ஒன்றிய அரசின் விவசாய அடையாள அட்டை எண், நிலத்திற்கான பட்டா யாரிடம் உள்ளதோ, அந்த விவசாயிகளுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் இதுவரை சுமாா் 36 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே விவசாயிகள் அடையாள அட்டை பெற்றுள்ளனா். விவசாய அடையாள அட்டை கட்டாயம் என வலியுறுத்தி தமிழ்நாட்டில் அமல்படுத்தினால், லட்சக்கணக்கான விவசாயிகள் அடையாள அட்டை பெற முடியாத நிலை ஏற்படும். அதமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் அடையாள அட்டை கட்டாய திட்டத்தை அமல்படுத்தாமல் பழைய திட்டத்தின்படி தொடர கோரிக்கை விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.