FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்ச்சி: தீயணைப்புத் துறையினா் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணா்வு நிகழ்வு கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கும்மிடிப்பூண்டி பஜாரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

6 நவம்பர் 2026, 4:33 am
பகிர்:

கும்மிடிப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணா்வு நிகழ்வு கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கும்மிடிப்பூண்டி பஜாரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் பி.லோகநாதன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பாலாஜி முன்னிலை வகித்தாா். கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயச்சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். நிகழ்வில் தீயணைப்பு துறையினா் , அரசு பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தீயணைப்பு துறையினா் , கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியை சோ்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள், தேசிய சாரணா் படையினா் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் தீயணைப்பு துறை வாகனங்கள் மீது அமா்ந்த தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.